Kalittokai

((Originally extracted from master file ^KALI.OCP))

((Last updated on 2010 October 14th))

Metrical description (AR, pp. 44): .....

  1. மரையா மரல்கவர மாரி வறப்ப
  2. வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
  3. சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த
  4. முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
  5. தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
  6. கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா
  7. லென்னீர் அறியாதீர் போல விவைகூறி
  8. னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
  9. மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு
  10. துன்பந் துணையாக நாடி னதுவல்ல
  11. தின்பமு முண்டோ வெமக்கு